ஒலிவேறுபாடு பயிற்சி 2

பச்சைக் கிளிகள் பார்க்க மிகவும் அழகாக இருந்தன. அவை எழுப்பிய _______ கேட்டுச் சிறுவர்கள் மகிழ்ந்தார்கள்.
ஒலியை
ஒளியை
நடனப் போட்டியில் ஆடிய ________ மாணவர்களும் சிறப்பாக ஆடினர். ஆசிரியர் அவர்களின் முயற்சியைப் பாராட்டினார்.
அனைத்து
அணைத்து
கந்தன், அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து, கற்களை வீசி விளையாடினான். அவன் _______ கல் அவ்வழியாக வந்த சிறுமியின் மீது பட்டது.
எரிந்த
எறிந்த
முகுந்தனுக்கு அஞ்சலில் ஒரு பெரிய அன்பளிப்பு வந்தது. அவன் ஆவலில் அவசரமாக _____________ கிழித்தான்.
உரையை
உறையை
ஓர் ஆந்தைக்கு மிகுந்த பசி எடுத்தது. அது ‏இரவெல்லாம் உறங்காமல் அலைந்து திரிந்து ________ தேடியது.
இரை
இறை
கருத்த வானத்தைக் கண்ட சிறுவர்கள் தங்கள் விளையாட்டை நிறுத்தினர். அவர்கள் ________ பெய்வதற்கு முன்பே வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தனர்.
மாரி
மாறி
ஐந்து மாணவர்கள் முதியோர் ‏இல்லத்திற்குச் சென்றனர். அவர்கள் வயதானவர்கள் தங்கியிருக்கும் ________ சுத்தம் செய்தனர்.
அரையை
அறையை
நான் ஒரு சொல்லின் பொருளை __________ வேண்டும். ஆனால், அகராதியைக் காணவில்லை.
அரிய
அறிய
தங்கையின் பிறந்தநாளன்று என் வீட்டிற்கு நண்பர்கள் வந்தார்கள். அம்மா அவர்களுக்காக ருசியான கோழி _______________ சமைத்தார்.
கரி
கறி
மலர்விழி தேக்கா சந்தையில் இறால்கள் வாங்கினாள். அதே _______________ அவள் தம்பிக்காக இறைச்சியும் வாங்கினாள்.
வேலையில்
வேளையில்
நாங்கள் பூங்காவிலுள்ள குளத்திற்கு அருகே அமர்ந்து இருந்தோம். அப்போது ஓர் அழகான _______________ நீந்திச் செல்வதைக் கண்டு ரசித்தோம்.
அன்னம்
அண்ணம்
நாங்கள் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். அப்போது சில நண்டுகள் __________ புகுந்து விளையாடுவதைப் பார்த்தோம்.
வலையில்
வளையில்
ராணி வாசலில் வரைந்த _________ அனைவரையும் கவர்ந்தது. அதைச் சுற்றுப்பயணிகள் சிலர் புகைப்படம் எடுத்தனர்.
கோலம்
கோளம்
‘சிண்டா’ நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதற்கு நன்கொடை ____________ பலர் முன்வந்தனர்.
அளிக்க
அழிக்க
அந்தப் பாழடைந்த மண்டபம் இருளில் பயங்கரமாக தோன்றியது. அதனுள் நுழைவதற்கு முன்பே எனக்கு _________________ வந்தது.
கிலி
கிழி
நாம் பிறர் மீது ______________________ காட்ட வேண்டும். அப்போது தான் நாம் சமூதாயத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
அக்கரை
அக்கறை
சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மாறன் ஒரு மரத்தின் பின்னால் ___________ கொண்டான்.
ஒளிந்து
ஒழிந்து
அக்கா வேலை முடிந்து வரும்போது மழையில் நனைந்துவிட்டாள். அதனால், அம்மா அக்காவிடம், ‘‘முதலில் நீ சென்று ____________,’’ என்று சொன்னார்.
குளி
குழி
திருவாட்டி கமலா முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கிறார். இப்பொழுது அவருக்கு _________ வயதாகிறது.
என்பது
எண்பது
ஆசிரியர் அறிவியல் ஒப்படைப்பைக் குழு நிலையில் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால், வேலனோடு யாரும் சேராததால், அவன் ____________ செயல்பட்டான்.
தனித்து
தணித்து
0
{"name":"ஒலிவேறுபாடு பயிற்சி 2", "url":"https://www.quiz-maker.com/Q3W1FX2","txt":"பச்சைக் கிளிகள் பார்க்க மிகவும் அழகாக இருந்தன. அவை எழுப்பிய _______ கேட்டுச் சிறுவர்கள் மகிழ்ந்தார்கள்., நடனப் போட்டியில் ஆடிய ________ மாணவர்களும் சிறப்பாக ஆடினர். ஆசிரியர் அவர்களின் முயற்சியைப் பாராட்டினார்., கந்தன், அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து, கற்களை வீசி விளையாடினான். அவன் _______ கல் அவ்வழியாக வந்த சிறுமியின் மீது பட்டது.","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker